சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத்தாக்கலுக்கு முதல் நாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, திரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளையோர் அமைப்புகளுக்கு மிகப்பெரிய நிதி ஒதக்கீட்டை அறிவித்ததற்கும், திரெங்கானு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரெங்கானு மாநில இளைஞர் மன்றத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும், மாநில மோட்டார் சைக்கிள் கிளப்பிற்கு 2 லட்சம் வெள்ளியும் துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் அறிவித்து இருப்பதை மூடா கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துணைப்பிரதமரின் இந்த செயல், லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இப்போது அறிவிக்கப்படாவிட்டாலும் தேர்தல் முடிந்தப்பின்னர், திரெங்கானு மாநில இளையோர் அமைப்புகளுக்கு அந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்பதாகவே இருந்துள்ளது என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


