Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்
அரசியல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மந்திரி பெசார் பதவிக்கான எந்தவொரு "அட்டைப் பட" வேட்பாளரையும் அறிவிக்கவில்லை என்று அக்கூட்டணியின் புத்திரி வங்சா வேட்பாளர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் சுல்தானின் ஆட்சி அதிகாரத்துக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே மந்திரி பெசார் பதவிக்கான வேட்பாளரை அறிவிப்பது அவசியமில்லை என்றும், அந்த நியமன அதிகாரம் இறுதியில் ஜோகூர் சுல்தானின் அதிகார வரம்பில் இருப்பதை பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக மதிப்பதாகவும் மஸ்லீ மாலிக் விளக்கமளித்துள்ளார்.

நேற்று இஸ்கந்தர் புத்திரியில் நடைபெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மஸ்லீ மாலிக், மாநில மந்திரி பெசார் பதவிக்கென ஒரே ஒருவரை முன்னிறுத்துவதற்குப் பதிலாக, மாநிலத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்யத் தயாராக உள்ள திறமையான வேட்பாளர்கள் குழுவையே கூட்டணி மக்களிடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் அமினுடின் ஹருன் கேள்வி: பிகேஆர் தேர்தல் வாக்குறுதிகளை விட மாநிலத்தின் தற்போதைய முதலீட்டு சாதனை மிக அதிகம்

நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் அமினுடின் ஹருன் கேள்வி: பிகேஆர் தேர்தல் வாக்குறுதிகளை விட மாநிலத்தின் தற்போதைய முதலீட்டு சாதனை மிக அதிகம்

போர் சூழலிலும் மலேசியா நிலைத்திருக்க மடானி அரசாங்கமே காரணம் / செயல்பாடுகளை வைத்து மதிப்பிட மலேசியர்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்

போர் சூழலிலும் மலேசியா நிலைத்திருக்க மடானி அரசாங்கமே காரணம் / செயல்பாடுகளை வைத்து மதிப்பிட மலேசியர்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்

சிறைச்சாலைச் சட்டத் திருத்தம் குறித்து தொடர்புடைய இலாக்காக்களுடன் அரசு ஆலோசனை: உள்துறை அமைச்சர் தகவல்

சிறைச்சாலைச் சட்டத் திருத்தம் குறித்து தொடர்புடைய இலாக்காக்களுடன் அரசு ஆலோசனை: உள்துறை அமைச்சர் தகவல்

வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி

வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு இராணுவம், போலீஸூக்கு அன்வார் உருக்கமான வேண்டுகோள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு இராணுவம், போலீஸூக்கு அன்வார் உருக்கமான வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்