Sep 20, 2026
Thisaigal NewsYouTube
இது மாநிலத் தேர்தல் அல்ல; பொதுத் தேர்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது!" - ஜசெக கஸ்தூரி ராணி பட்டு அதிரடி முழக்கம்
அரசியல்

இது மாநிலத் தேர்தல் அல்ல; பொதுத் தேர்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது!" - ஜசெக கஸ்தூரி ராணி பட்டு அதிரடி முழக்கம்

Share:

ஒரு மாநிலத் தேர்தலுக்காக அனைத்து இனங்களைச் சேர்ந்த தலைவர்களும் பெருவாரியாகக் குவிந்திருப்பது, இது ஒரு மாநிலத் தேர்தல் போல் அல்லாமல் பொதுத் தேர்தல் போன்றதொரு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது என்று ஜசெக மத்திய செயலவை உறுப்பினரும் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான செயலாளருமான கஸ்தூரி பட்டு தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த சில தினங்களாக வீடு வீடாக தாங்கள் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் தங்கள், நகராண்மைக்கழகம் அல்லது சட்டமன்ற அளவில் எதிர்நோக்கும் சில உள்ளூர்ச் சிக்கல்களைத் தங்களிடம் முன்வைத்துள்ளதாக அவர் விவரித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலம் ஒரு நல்ல தலைமைத்துவத்திடம் தொடர்ந்து இருப்பதை மாநில மக்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் சுபிட்சமிக்க, வளம் நிறைந்த ஒரு நிம்மதியான வாழ்க்கைச் சூழலை மாநில மக்கள் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்று கஸ்தூரி ராணி பட்டு மிக உறுதியாக வலியுறுத்தினார்."

Related News