Sep 19, 2026
Thisaigal NewsYouTube
நஜிப் நிதி திரட்டுவது ஊழலை மன்னிக்கும் கலாசாரத்தை உருவாக்கும் – பிகேஆர் மகளிர் பிரிவு
அரசியல்

நஜிப் நிதி திரட்டுவது ஊழலை மன்னிக்கும் கலாசாரத்தை உருவாக்கும் – பிகேஆர் மகளிர் பிரிவு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த உதவுவதற்காக அம்னோ தொடங்கியுள்ள நஜிப் ஒற்றுமை நிதி, ஊழலை மன்னிக்கும் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று பிகேஆர் மகளிர் பிரிவு உதவித் தலைவர் லோ கேர் சியான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தண்டனை பெற்ற ஒரு தலைவரின் அபராதத்தை அரசியல் கட்சியே நிதி திரட்டி செலுத்த உதவுவது, இளம் தலைமுறைக்கு ஊழல் தொடர்பாக என்ன செய்தியை வழங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் குற்றங்களை ஒருவரின் பிரபலத்தையோ அரசியல் ஆதரவையையோ அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடக்கூடாது என்றும், சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையிலேயே அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், நேற்று தொடங்கப்பட்ட நஜிப் ஒற்றுமை நிதி, இன்று காலை 9.30 மணியளவில் ஒரு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

Related News