முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு மற்றும் இல்லத் தடுப்புக் காவல் தொடர்பாக, ஜசெக மத்தியச் செயற்குழு இன்று தனது நிலைப்பாட்டை முடிவு செய்யவுள்ளது.
இன்று நடைபெறும் கூட்டத்தில், அமைச்சரவையில் ஜசெக தொடர்ந்து இடம் பெறுவதா அல்லது அதன் அமைச்சர்கள் பதவி விலகுவதா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எந்த முடிவாக இருந்தாலும் அது மத்தியச் செயற்குழுவின் கூட்டு முடிவாக இருக்கும் என்றும், பதவி விலகும் நிலை ஏற்பட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அதில் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறுகையில், மாமன்னரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை கட்சி மதிப்பதாகவும், அதேவேளை சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.








