Sep 17, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தை ஆட்சிக்குழு களங்கப்படுத்திவிட்டது - அந்தோணி லோக் சாடல்
அரசியல்

நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தை ஆட்சிக்குழு களங்கப்படுத்திவிட்டது - அந்தோணி லோக் சாடல்

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு, துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் இருந்து நீக்கும் பிரகடனத்தை அங்கீகரித்திருப்பது அரச குடும்ப அமைப்பின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சிரம்பான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் அந்தப் பிரகடனத்தையும் புதிய ஆட்சியாளரையும் உடனடியாக அங்கீகரித்திருப்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.

அதேவேளையில் மாநில அரசியலமைப்பையோ அல்லது உண்டாங் தலைவர்கள் பேரவையான டிகேயுவின் முடிவுகளையோ, ஆட்சிக் குழுவானது மீற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் முறையான சட்ட நடைமுறையின்றி யாங் டிபெர்துவான் பெசாரைத் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் அந்தோணி லோக் விளக்கமளித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரத்தில் திடீர் திருப்பம்: துவாங்கு முஹ்ரிஸ் நீக்கப்பட்டதை அங்கீகரித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரத்தில் திடீர் திருப்பம்: துவாங்கு முஹ்ரிஸ் நீக்கப்பட்டதை அங்கீகரித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

இன்னும் 4 முதல் 5 மாதங்களில் 16-வது பொதுத்தேர்தலா? – மசீச தலைவர் வீ கா சியோங் ஆரூடம்

இன்னும் 4 முதல் 5 மாதங்களில் 16-வது பொதுத்தேர்தலா? – மசீச தலைவர் வீ கா சியோங் ஆரூடம்

துவாங்கு முஹ்ரிஸை நீக்கியதாக அறிவித்தது தேசத் துரோகம் - முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருன் காட்டம்

துவாங்கு முஹ்ரிஸை நீக்கியதாக அறிவித்தது தேசத் துரோகம் - முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருன் காட்டம்

அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி: ஹாடியிடம் போலீஸ் விசாரணை

அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி: ஹாடியிடம் போலீஸ் விசாரணை

துவாங்கு முஹ்ரிஸ் இனி நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் இல்லை: மாநில ஆட்சிக் குழு அதிரடி அறிவிப்பு

துவாங்கு முஹ்ரிஸ் இனி நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் இல்லை: மாநில ஆட்சிக் குழு அதிரடி அறிவிப்பு

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படுகிறதா? – சமூக ஊடகத்தில் பரவிய தகவலுக்கு மாநில அரசு மறுப்பு

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படுகிறதா? – சமூக ஊடகத்தில் பரவிய தகவலுக்கு மாநில அரசு மறுப்பு