May 3, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் திறந்த இல்ல நிகழ்ச்சிகள் குறைந்த செலவில் நடத்தப்படும் - அமைச்சர் தகவல்
அரசியல்

சரவாக்கில் திறந்த இல்ல நிகழ்ச்சிகள் குறைந்த செலவில் நடத்தப்படும் - அமைச்சர் தகவல்

Share:

ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகள் வழக்கம் போல இவ்வாண்டும் நடைபெறுமென சரவாக் மாநிலம் அறிவித்துள்ளது.

என்றாலும், மிதமான அளவில் குறைந்த செலவிலேயே அவை ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில சுற்றுலா, படைப்பாற்றல் தொழில் மற்றும் நிகழ்த்துக் கலை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளை இரத்து செய்யும் மத்திய அரசின் உத்தரவானது, சரவாக் மாநிலத்திற்குப் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு சில முடிவுகளை எடுக்கலாம், ஆனால் சரவாக் மாநில அரசாங்கம் மற்றும் அதன் முகமைகளைப் பொறுத்தவரையில், தனக்கென சில வழிமுறைகளை வகுத்துள்ளது என்றும் அப்துல் கரீம் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய போர் காரணமாக செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு