கோலாலம்பூர், டிச.10-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தனது எஞ்சிய 6 ஆண்டு சிறைத்தண்டனை காலத்தை வீட்டில் கழிப்பதற்கு ஓர் அரசாணை உத்தரவு இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் தாம் கருத்துரைக்க இயலாது என்று ஒற்றுமை அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் மாமன்னர் சம்பந்தப்பட்டுள்ளதால் கூட்டரசுப்பிரதேச மன்னிப்பு வாரியத்தின் 61 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பில் தாம் கருத்துக்கூறக்கூடாது என்ற நிலையப்பாட்டை ஒற்றுமை அரசாங்கம் கொண்டு இருப்பதாக பிரதமர் விளக்கினார்.
மாமன்னரால் தலைமையேற்ற மன்னிப்பு வாரியம் என்பது சட்ட அம்சங்களுக்கு உட்பட்டதாகும். எனவே இது குறித்து கருத்துரைப்பது சட்டத்தை மீறிய செயலாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.








