Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்
அரசியல்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

மலாய் மற்றும் முஸ்லிம் ஒற்றுமை குறித்து விவாதிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடினை பேங்கோக்கில் சந்தித்ததை அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று கோலாலம்பூரில் உள்ள மெனாரா ஃபெல்டாவில் ஊடகங்களிடம் பேசிய பாரிசான் நேஷனல் தலைவரான ஸாஹிட், இந்தச் சந்திப்பு கடந்த ஆண்டு நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

அண்மையில் ஹம்ஸாவுடன் எந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை. அது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்தது, என்று துணைப்பிரதமருமான ஸாஹிட் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அஹ்மாட் ஸாம்சுரி மொக்தார் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் துணைப் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் ஆகியோரும் கலந்து கொண்டு மலாய்-முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து விவாதித்ததாகப் பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.

Related News