Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு
அரசியல்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

கடந்த 2020-ஆம் ஆண்டு பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்வதற்குக் காரணமாக இருந்த 'ஷெரட்டன் நகர்வு' நடவடிக்கையின் போது கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, தலா 10 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு கோரி பிகேஆர் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, வேட்பாளர்கள் அனைவரும் கட்சி மாறினால் 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்தை மீறியதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிகேஆர் பொதுச் செயலாளர் Fuziah Salleh கட்சியின் சார்பில் இந்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Baru Bian, Kamarudin Jaffar, Mansor Othman, Rashid Hasnon, Saifuddin Abdullah, ஆர். சந்தாரா குமார் ஆகியோரே அந்த 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

Related News