Oct 11, 2026
Thisaigal NewsYouTube

தெங்கு ஸாஃப்ருல் விலகிய போதிலும், அம்னோவிற்கு 7 அமைச்சர்கள் பதவிகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெங்கு ஸாஃப்ருல் விலகிய போதிலும், அம்னோவிற்கு 7 அமைச்சர்கள் பதவிகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மே.31

அம்னோ கோத்தா ராஜா டிவிஷன் தலைவரான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகிய போதிலும் அவர் பொறுப்பேற்று இருந்த அமைச்சர் பதவி, அம்னோவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.

தெங்கு ஸாஃப்ருல் வகித்து வந்த அமைச்சர் பதவியுடன் சேர்த்து அம்னோவிற்கு 7 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. தற்போது அம்னோவிலிருந்து தெங்கு ஸாஃப்ருல் விலகி விட்டதால் அம்னோ வகித்து வந்த அமைச்சர் பதவிகள் 6 ஆகக் குறைந்துள்ளன.

குறைந்துள்ள அந்த ஓர் அமைச்சர் பதவி, அம்னோவிற்கு மீண்டும் வழங்கப்பட்டு, கட்சியின் கோட்டா நிரப்பப்பட வேண்டும் என்று துணைப்பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் இன்று அழுத்தத் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →