Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் வழக்கில்:அரசாணை உத்தரவை அம்பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் வாதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் வழக்கில்:அரசாணை உத்தரவை அம்பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் வாதம்

புத்ராஜெயா, ஜன.6-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், தமது எஞ்சிய சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்று கூறப்படும் அரசாணை உத்தரவு குறித்து அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கும், அதன் ஏஜெண்டுகளுக்கும் உள்ளது என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் நஜீப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா வாதிட்டார்.

அரசாணை உத்தரவு தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே அவரின் மேல்முறையீட்டு வழக்கில் புதிய ஆதாரமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள ஒரு சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.

சிறைத்தண்டனை காலத்தை விட்டுக்காவலில் கழிப்பதற்கு நஜிப் செய்து கொண்ட விண்ணப்பம், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், நஜீப் மேல்முறையீட்டில் அவர் மகன் சார்வு செய்துள்ள புதிய ஆதாரத்தை அப்பீல் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஷாபி குறிப்பிட்டார்.

நஜீப் மகன் தனது அப்பிடேவிட் மனுவில் சேர்த்துக்கொண்டுள்ள புதிய ஆதாரத்தின்படி அப்படியொரு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார்.

எனவே நஜீப்பிற்கு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் அரசாணை உத்தரவு உள்ளதா? இல்லையா? என்பதே இவ்வழக்கில் அடிப்படை சாரம்சமாகும். அதனை அறிவிக்க வேண்டியது மற்றும் அம்பலப்படுத்த வேண்டியது முன்னாள் சட்டத்துறை தலைரவர் அகமட் தெரிரடீனின் கடமையாகும் என்று ஷாபி விளக்கினார்.

பொது மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள ஓர் அரசாங்கம், தமது கட்சிக்காரருக்கு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் உத்தரவுகு குறித்து பதில் அளிக்க வேண்டிய தார்மீக கடப்பாட்டை கொண்டு இருப்பதாக ஷாபி தமது வாதத்தில் முன்வைத்தார்.

இவ்வழக்கில் அரசாங்கம் சார்பாக ஆஜரான சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த கூட்டரசு வழக்கறிஞர் சம்சுல் போல்ஹசான், நஜீப் செய்த விண்ணப்பம் தொடர்பாக கூடிய பொது மன்னிப்பு வாரியம், அவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தை விவாதிக்கவில்லை என்றார்.

கடந்த ஆண்டு ஜனவரரி 29 ஆம் தேதி கூட்டப்பட்ட 61 ஆவது பொது மன்னிப்பு வாரியத்கூட்டத்திற்கு நாட்டின் மாமன்னராக இருந்த சுல்தான் அப்துல்ல தலைமையேற்றார்.

பொது மன்னிப்புக்கோரி நஜீப் செய்து கொண்ட விண்ணப்பம் குறித்து விவாதிக்கப்பட்ட து. அப்போது, நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத்தண்டனை காலத்தை குறைப்பது மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட அபாராதத் தொகையை 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைப்பது ஆகிய விவகாரங்களளை மட்டுமே மன்னிப்பு வாரியம் விவாதித்ததே தவிர அவரை வீட்டக்காவலில் வைப்பது குறித்து விவாதிக்கவில்லை என்று அரசாங்க வழக்கிஞர் வாதிட்டார்.

தவிர நஜீப் சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறப்படும் தகவல் விவாதிக்கப்படவில்லை என்பதால் தம்மை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்று நஜீப் செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினரை உள்ளடக்கிய அப்பீல் நீதிமன்றத்திடம் அரசாங்க வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →