நவ. 7-
நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் புத்துயிர் காணவிருக்கும் தேசிய சேவைத்திட்டமான PLKN 3.0 விரிவான ஆய்வுக்குப்பின்னரே மீண்டும் அமல்படுத்தப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டீன் தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சினால் கல்வியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிபுணத்துவ ஆய்வுக்குப் பின்னரே இளையோர்களுக்கான அந்த நாட்டுப்பற்றுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இளையோர்கள் மத்தியில் கட்டெழுங்கு, நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு முதலிய பண்புக்கூறுகள் நிறைந்த குண இயல்புகளை வலியுறுத்தும் இது போன்ற பயிற்சித் திட்டம் நாட்டிற்கு இன்றியமையாததாகும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.








