Feb 13, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியிலிருந்து ஹம்ஸா ஸைனுடின் நீக்கம்
அரசியல்

பெர்சத்து கட்சியிலிருந்து ஹம்ஸா ஸைனுடின் நீக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினால் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கும், ஹம்ஸா ஸைனுடினுக்கும் இடையே நிலவி வந்த தலைமைத்துவப் போட்டிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹம்ஸா ஸைனுடின் கட்சியின் அரசியலமைப்பின் 9.1.4 பிரிவை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டறிந்துள்ளது.

லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஸைனுடினின் இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இருப்பினும், 14 நாட்களுக்குள் மேல்முறையீட்டு வாரியத்திடம் முறையிட வாய்ப்பு உள்ளது என ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் ராட்ஸி மனான் தெரிவித்துள்ளார்.

ஹம்ஸா ஸைனுடினின் நீக்கத்தைக் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களும், பொதுச் செயலாளர் அஸ்மின் அலியும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News

"நான் சீன எதிர்ப்பாளர் அல்ல; ஜசெக கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறேன்" - அக்மால் கருத்து

"நான் சீன எதிர்ப்பாளர் அல்ல; ஜசெக கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறேன்" - அக்மால் கருத்து

தலைமைக்கு கீழ்படியாத உறுப்பினர்களுக்கு ஹாடி அவாங் கடும் எச்சரிக்கை

தலைமைக்கு கீழ்படியாத உறுப்பினர்களுக்கு ஹாடி அவாங் கடும் எச்சரிக்கை

"நான் இன்னும் அம்னோவில் தீவிரமாக இருக்கிறேன்" - முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தகவல்

"நான் இன்னும் அம்னோவில் தீவிரமாக இருக்கிறேன்" - முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தகவல்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஆராய்கிறது

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஆராய்கிறது

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்