இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை தொட்டு பேசியதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினிடம் புக்கிட் அமான் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஜோகூர் மாநில இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விவகாரத்தை பேசியதாக முகைதீன் யாசினுக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கோலாலம்பூர் முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசினிடம் போலீசார் இன்று காலையில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு வாக்களிப்பது பாவச் செயல் என்றும், இதன் மூலம் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழக்கலாம் என்றும் முகைதீன் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.








