May 4, 2026
Thisaigal NewsYouTube
கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து
அரசியல்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

Share:

கோயில்களை இடிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து சட்டத்துறை தலைவரான அட்டர்னி ஜெனரல் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சரும், ஜசெக தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களின் நில விவகாரங்களை அமைதியான முறையில் தீர்க்க மாநில அரசுகள் முறையான வழிமுறைகளை வைத்துள்ளன. இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கோயில்களை இடிக்கப் போவதாக மிரட்டல் விடுப்பவர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டும், சட்டத்துறை தலைவர் அலுவலகம் மௌனம் காப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

இது குறித்து தாம் பலமுறை அமைச்சரவையில் பேசியுள்ளதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார். ஆனால், ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் சட்டத்துறை தலைவரிடமே உள்ளது. இந்தத் தாமதத்திற்கான காரணம் என்ன என்பதையும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சட்டத்துறை அலுவலகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவர் விளக்க வேண்டும்," என கோபிந்த் சிங் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு