May 4, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்க மலேசியா தயார் நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் அமீர் ஹம்சா உறுதி
அரசியல்

மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்க மலேசியா தயார் நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் அமீர் ஹம்சா உறுதி

Share:

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ளும் வலுவான நிலையில் மலேசியா இருப்பதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் சீராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

"மத்திய கிழக்கு மோதல்களால் உலகளவில் ஏற்படும் தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் திறன் மலேசியாவிற்கு உண்டு. நமது நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தற்போது நல்ல நிலையில் உள்ளது. சந்தையில் எந்தவிதமான தட்டுப்பாடோ அல்லது இடையூறுகளோ ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

முக்கியமாக, போக்குவரத்து எரிபொருளான RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் 0 என்ற மானிய விலையிலேயே அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றித் தக்கவைப்பதற்கான நிதித் திறன் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளையில் உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து, மக்களின் சுமையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமீர் ஹம்சா தெரிவித்தார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு