Jun 25, 2026
Thisaigal NewsYouTube
கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்
அரசியல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

Share:

கோயில் விவகாரங்களில் இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயல்படும் தரப்பினர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவிருப்பதையும் டாக்டர் குணராஜ் ச சுட்டிக்காட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் PKR கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன், மூன்று மாநில தொகுதிப் பொறுப்பாளர்களைச் சந்தித்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் குணராஜ் இதனைத் தெரிவித்தார்.

மத உணர்வுகளைப் புண்படுத்துவோர் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய டாக்டர் குணராஜ், இவ்விவகாரம் அமைச்சரவை மட்டத்தில் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Related News