Jun 25, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்குப் புதிய 'நற்செய்திகள்': பிரதமர் அன்வார் விரைவில் அறிவிப்பு
அரசியல்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்குப் புதிய 'நற்செய்திகள்': பிரதமர் அன்வார் விரைவில் அறிவிப்பு

Share:

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மக்களுக்கு மேலும் சில "நற்செய்திகளை" பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று அவரது மூத்த ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா, தெரிவித்துள்ளார்.

மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இந்த அறிவிப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இரண்டாம் கட்ட 'ரஹ்மா' நிதியுதவியான STR நாளை முதல் மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மதப் போதகர்களுக்கான சிறப்பு நிதி உதவியையும் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேசமயம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அங்குள்ள மலேசியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் நேரில் கண்காணித்து வருகிறார்.

மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் மடானி அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் எனப் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related News