கோலாலம்பூர், நவ. 12-
அரசாங்க குத்தகைகளை பெற்றுத் தருவதற்கு லட்சக்கணக்கான வெள்ளி லஞ்சப் பேரம் நடந்ததாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டில் தகவல் அளிப்பவரும், இந்த லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தகவல் அளிக்க முன்வந்துள்ள நபருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தகவல் அளிப்பரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இது போன்ற விவகாரங்களில் எந்தவொரு தரப்பினரையும் அரசாங்கம் தற்காக்காது. இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமே விட்டு விடுவதுதான் நல்லது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.








