Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சபா மக்களின் முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் மதிக்கிறது
அரசியல்

சபா மக்களின் முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் மதிக்கிறது

Share:

சிங்கப்பூர், டிசம்பர்.04-

கடந்த வாரம் நடைபெற்ற சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் அந்த மாநிலத்தில் உள்ள மக்களின் முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் மதிக்கிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அதே வேளைத்ப்யில் கூட்டரசு அரசாங்கத்திற்கு எதிராக மாநில மரபு வளர்ச்சி மற்றும் மரபு உணர்வு ஆகியவற்றில் சபா வாக்காளர்கள் உந்தப்பட்டு இருக்கலாம் என்பதை பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார்.

சபா மாநிலத்திற்குச் சாலை, நல்ல நீர் விநியோகம் மற்றும் மின்சாரத் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் அதிக அளவில் நிதி உதவி வழங்கியுள்ளது. ஆனால், பல திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. இது மாநில மக்களுக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கலாம். அத்துடன் கூட்டரசு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தவறான கண்ணோட்டத்தைக் கொண்டு இருக்கலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News