கோலாலம்பூர், நவம்பர்.12-
உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் கொண்டுள்ள பணிச் சுமைகளில் தீவிர கவனம் செலுத்தி வந்ததால் தமது செனட்டர் பதவிக் காலம் முடிவடைவதைப் பற்றித் தாம் சிந்திக்கவில்லை என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தம்முடைய செனட்டர் பதவிக் காலம் முடிவடையவிருப்பதை ஒப்புக் கொண்ட சைஃபுடின், பணிச் சுமையின் காரணமாக செனட்டர் பதவிக் காலத்தைப் பற்றிச் சிந்திக்க முடியாமல் போனது என்றார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இதுவரை கலந்து ஆலோசித்தது இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்க அமைச்சர்கள் பதவியேற்ற போது டத்தோ ஶ்ரீ சைஃபுடின், செனட்டராக நியமிக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவரின் செனட்டர் பதவிக் காலம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது.








