சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி சார்பாக கோலகுபு பாரு தொகுதியில் கடந்த 13 நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, மூடா கட்சியின் தேசியத் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேரடியாக களம் இறங்கி, முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோலகுபு பாரு நகரில் டாக்டர் சிவபிரகாஸுடன் வணிகத் தளங்களிலும், பொது இடங்களிலும் வாக்காளர்களை சந்தித்த சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், மூடா கட்சியின் நம்பிக்கை மிகுந்த தொகுதியான கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் தங்கள் கட்சியின் மூலம் மக்களின் பிரதிநிதியாக ஒருவரை சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்படி மிக உருக்கமாக வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
மூவின மக்கள் கலந்த தொகுதியான வரலாற்றுச்சிறப்புமிக்க கோலகுபு பாருவில் தலைசிறந்த கல்விமானாகிய டாக்டர் சிவபிரகாஷ்ஸை ஒரு வேட்பாளராக நிறுத்துவதில் கட்சி பெருமைப்படும் அதேவேளையில் பொருளாதாரத்துறையில் சிறந்து விளங்கும் அவரை தொகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


