கோலாலம்பூர், நவ. 16-
தாய்லாந்து எல்லைப்பகுதியான கோலோக்கில் கடந்த வாரம் போதைப்பொருளுடன் கிளந்தான் மாநில பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மலேசியா தலையிடாது என்று உள்துறை அ மைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தங்களின் எல்லைப்பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் கைது செய்வதற்கு தாய்லாந்துக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என்று சைபுடின் திட்டவட்டவட்டமாக தெரிவித்தார்.








