Dec 17, 2025
Thisaigal NewsYouTube
முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்
அரசியல்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

பெர்சத்து கட்சியின் நிதியை அதன் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் முறைகேடு புரிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும் பொறுப்பை எஸ்பிஆர்எம்- மிடமே தாங்கள் விட்டு விடுவதாக பாஸ் கட்சி அறிவித்தது.

இது போன்ற குற்றச்சாட்டுகளை அமலாக்க அதிகாரிகள் விசாரணை செய்வது மூலமே உண்மையிலேயே யார் சொல்வது உண்மை என்பதைக் கண்டறிய முடியும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபாலி ஷாரி தெரிவித்தார்.

தனக்கு எதிராக துன் மகாதீர் கூறியுள்ள கடும் குற்றச்சாட்டை பெரிக்கத்தான் நேஷனல் தலைவருமான டான் ஶ்ரீ முஹிடின் யாசின் அண்மையில் வன்மையாக மறுத்துள்ளார்.

Related News