Dec 18, 2025
Thisaigal NewsYouTube
சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ
அரசியல்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

Share:

கோத்தா கினபாலு, டிசம்பர்.18-

கினபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தர்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினைத் தக்க வைக்கக்கூடிய 4 திறமையான வேட்பாளர்களை, சபா அம்னோ அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஜெஃப்ரி அரிஃபின் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மறைந்த முன்னாள் சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினின் மகனும், சபா அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான நாயிம் குர்னியாவானை வேட்பாளராகக் களமிறக்கக்கூடிய வாய்ப்புகளையும் அவர் மறுக்கவில்லை.

அதே வேளையில், தனது தந்தைத் தக்க வைத்திருந்த இரு தொகுதிகளில் போட்டியிடத் தயங்குவதாக, நாயிம் குர்னியாவான் அண்மையில் சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அது அவரது தனிப்பட்ட கருத்து என ஜெஃப்ரி அரிஃபின் பதிலளித்துள்ளார்.

மக்கள் செல்வாக்குமிக்க, வெற்றி வாய்ப்பினைத் தக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட புதியவர்கள் மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வரும் ஜனவரி 10-ஆம் தேதி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு, 1 வாரத்திற்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் ஜெஃப்ரி அரிஃபின் குறிப்பிட்டுள்ளார்.

Related News