கோலாலம்பூர், டிசம்பர்.19-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் முன்வைத்த குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி தெரிவித்துள்ளார்.
மலாய் கட்சிகளை ஒன்றிணைக்கும் மகாதீரின் 'மலாய் ஒற்றுமை' முயற்சிக்கு, இந்த மோதல், பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையோ இல்லையோ, இது முகைதீன் யாசினின் அரசியல் நம்பகத்தன்மைக்கு பெரும் சவாலாக அமையும் என்று மஸ்லான் அலி கூறியுள்ளார்.
முகைதீன் யாசின் கட்சி நிதியைத் திருடி தனது வீட்டில் வைத்திருப்பதாக துன் மகாதீர் குற்றம் சாட்டும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை முகைதீன் திட்டவட்டமாக மறுத்த போதிலும், மூத்த தலைவர் என்ற முறையில் துன் மகாதீர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.








