கோலாலம்பூர், நவம்பர்.02-
அம்னோவிலிருந்து தாம் நீக்கப்பட்ட போதிலும், அம்னோவை விட்டுத் தாம் வெளியேறவில்லை என்று அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அம்னோவிலிருந்து என்னை நீக்கவும், வெளியேற்றவும் கட்சிக்கு உரிமை உண்டு. ஆனால், தாம் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட போதிலும் தாம் இன்னமும் அம்னோவில் இருப்பது போன்ற உணர்வே மேலிடுகிறது என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி குறிப்பிட்டார்.
தாம் மீண்டும் அம்னோவில் இணையலாம் என்று ஆருடங்கள் வலுத்து வரும் வேளையில் கைரி ஜமாலுடின் ஊடகங்களுக்கு இன்று மனம் திறந்த போது இவ்வாறு தெரிவித்தார்.








