Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன மக்கள் ஆதரவு பேரணி: கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன்பு 300 பேர் ஒன்று கூடினர்
அரசியல்

பாலஸ்தீன மக்கள் ஆதரவு பேரணி: கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன்பு 300 பேர் ஒன்று கூடினர்

Share:

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு, இன்று சுமார் 300 பேர் ஒன்று கூடி பேரணி நடத்தினர்.

பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கிய இப்பேரணியை பாலஸ்தீன மலேசியச் செயலகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் பாலஸ்தீன மற்றும் மலேசியக் கொடிகளை ஏந்தியதுடன், ஈரான் தலைவர் அலி கமேனி-மின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாட்டாளர்கள் வழங்கிய வெள்ளை ரோஜா மலர்களையும் கையில் வைத்திருந்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு மற்றும் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் தியான் சுவா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடனான ஒற்றுமையை வலியுறுத்தியதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளையும் அவர்கள் விமர்சித்தனர்.

Related News