Dec 20, 2025
Thisaigal NewsYouTube
சென்னை- பினாங்கு நேரடி விமானச் சேவை வர்த்தகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்
அரசியல்

சென்னை- பினாங்கு நேரடி விமானச் சேவை வர்த்தகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்

Share:

பினாங்கு, ஜன.5-

கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய சென்னைக்கும், பினாங்கிற்கும் இடையிலான IndiGo நேரடி விமானச் சேவை, பினாங்கில் உள்ள வர்ததகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

இந்த நேரடி விமானச் சேவையின் மூலம் பினாங்கில் உள்ள வர்த்தகர்கள், சென்னையில் உள்ள தங்கள் தொழில் வாய்ப்புகளை முடித்துக்கொண்டு ஒரே நாளில் திரும்புவதற்கான வாப்புகளை தர வல்லதாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

பினாங்கில் உலகளாவிய தமிழ் வம்சாளி மாநாட்டில் நடைபெற்ற கருத்திணக்க ஒப்பந்த சடங்கைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நேரடி விமானச் சேவையின் மூலம் டிக்கெட் விலையும் மலிவாகும். ஒரே நாளில் வர்த்தக பேச்சுக்களை முடித்துக்கொண்டு பினாங்கு திரும்புவதற்கு வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம்.

இதன் மூலம் பினாங்கில் உள்ள நமது வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தாம் கருதுவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

இதில் பினாங்கில் உள்ள வர்த்தகர்களுக்கும், இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும் பினாங்கு இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம், ஒரு தொடர்பு பாலமாக இருப்பர் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

Related News