Oct 23, 2025
Thisaigal NewsYouTube
11.7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளது
அரசியல்

11.7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளது

Share:

டிச. 27-

சிலாங்கூர் மாநில அரசு, 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டு எனும் திட்டத்தின் மூலம் 11.7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக சுற்றுலாத் தலங்களை ம்படுத்தவும், 8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று சுற்றுலா, உள்ளாட்சி துறை ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Suee Lim தெரிவித்தார்.

உள்ளாட்சி மன்றங்களும் சுற்றுலாத் துறையினரும் சுற்றுப் பயணிகளை வரவேற்க தயாராக உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா முகவர் நிலையங்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்த இலக்கை அடைய முடியும் என்றும் Ng Suee Lim நம்பிக்கை தெரிவித்தார். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டங்கள் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு தற்போது செயலாக்கத்தில் உள்ளன என்றார்.

ISP குழுமத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டமான " Nourish With Hope, ISP Cares!" மூலம், அறிய நிலையில் இருக்கும் 30 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், 120 குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 ரிங்கிட் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வாங்க பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக மொத்தம் 2 இலட்சத்து 16 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு Ng Suee Lim மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.

Related News