Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஹம்ஸா ஸைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார்: தக்கியுடின் ஹசான் உறுதி
அரசியல்

ஹம்ஸா ஸைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார்: தக்கியுடின் ஹசான் உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.26-

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தற்போதைக்கு நீடிப்பார் என்று பெரிகாத்தான் நேஷனல் தலைமை கொறடா டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்வது தொடர்பாக இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இது குறித்து இன்று காலை 11 மணியளவில் மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துலைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்ஸா ஸைனுடினின் நிலை குறித்து விவாதிக்க சபாநாயகரைச் சந்தித்ததாக தக்கியுடின் கூறினார்.

இந்தச் சந்திப்பின் முடிவில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலோ அல்லது எதிர்க்கட்சி வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை அமைப்பிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தக்கியுடின் தெரிவித்தார்.

Related News