டிச.6-
பேரா மாநிலத்தின் மூலமாக மஇகாவுக்கு ஒரு செனட்டர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. பேரா மாநில தொடர்புக்குழுத் தலைவரும், தொழில் அதிபருமான டான்ஸ்ரீ இராமசாமிக்கு அந்த செனட்டர் பதவி வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பேரா மாநில சட்டமன்றக்கூட்டத்தில் டான்ஸ்ரீ இராமசாமியின் பெயர் முன்மொழியப்படவில்லை. மாறாக, ஈப்போ பாராட் அம்னோ தொகுதி தலைவர் செனட்டர் Dato' Shamsuddin Abd Ghaffar பெயரை மீண்டும் மேலவை உறுப்பினர் பதவிக்கு மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ Datuk Seri Saarani Mohamad முன்மொழிந்துள்ளார்.
இதனால் மஇகாவுக்கு செனட்டர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்ற ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.








