நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான சியு சே யோங் தொகுதி இந்தியர்களுக்கு அளப்பரிய சேவையை வழங்கியவர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் பொதுத் தேர்தல் முதல் லோபாக் தொகுதியை தற்காத்து வரும், இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டில் பகாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான் வெற்றி பெற்றார்.
நெகிரிசெம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சியு சே யோங், மாநில ஆட்சிக்குழுவில் நியமிக்கப்பட்டார்.
ஓர் சட்டமன்ற உறுப்பினரின் சீரிய சேவையே அவரை மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக உயர்த்தும் என்பதற்கேற்ப தமது சீரிய பணியின் காரணமாக சியு சே யோங் , ஆட்சிக்குழுவில் மனித வளம், தோட்டத்துறை மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றார்.
4 இந்து ஆலயங்களுக்கு நிலப்பட்டாக்களை பெற்று தருவதில் வெற்றிக்கண்ட சியு சே யோங் , செனாவாங்கில் துர்க்கா அம்மன் ஆலயம் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட போது உடனடியாக களத்தில் இறங்கி சுமார் 20 ஆயிரம் வெள்ளியை பெற்றுத் தந்து, ஆலய சீரமைப்புப்பணிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்

தேர்தலில் படுதோல்வி: ஒற்றுமை அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் சபா ஜசெக ஏற்காது


