May 3, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை
அரசியல்

Share:

அம்னோவானது தனது முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதில் தீவிரமாக இருந்தால், தமக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு ஆண்டுகாலத் தடையை நீக்குமாறு அக்கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு தாம் இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் கூட, அம்னோவில் இருந்து ஒருபோதும் வெளியேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் தாம் அம்னோவிற்கு திரும்புவது என்பது கடினமான ஒன்றாக இருக்காது என்றும் ஹிஷாமுடின் முகநூல் பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் அனைவரும் இந்த புனித ரமலான் மாதத்தில், விருப்பு, வெறுப்புகளைக் கடந்து எந்த ஒரு நிபந்தனையும் இன்றி மீண்டும் அம்னோவில் இணையலாம் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு