Aug 28, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு
அரசியல்

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

Share:

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அம்னோ முன்வைத்துள்ள “Rumah Bangsa” முயற்சிக்கு ஆதரவு வழங்க முடியாது என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

அம்னோவின் மையக் கொள்கையாக இஸ்லாம் இடம்பெறவில்லை என்றும் ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் அம்னோ தலைமையில் பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கூட்டம், இஸ்லாமை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், தேசிய உணர்வின் அடிப்படையில், மலாயர்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றதாகவும் ஹாடி அவாங் விவரித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் அமைக்கும் நோக்கில், அம்னோ தொடர்ந்து ஜசெக உடன் நட்பில் இருப்பதாகவும், இதனால் அவர்கள் தங்களின் அடிப்படைப் போராட்டங்களிலிருந்து விலகச் செய்யும் நிலையை உருவாக்குகிறது என்றும் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

Related News