Oct 26, 2025
Thisaigal NewsYouTube
காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!
அரசியல்

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.26-

47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உலகெங்கிலும், குறிப்பாகக் காசா பகுதியில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆற்றி வரும் பங்கிற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். உலகிற்குத் தேவைப்படும் முழுமையான அமைதியை உறுதிச் செய்வதில் டிரம்ப் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கமாக, நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைக் கொண்டிருந்த தாய்லாந்து - கம்போடியா ஆகிய நாடுகள் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள உறுதி பூண்டன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul, தங்கள் வசம் உள்ள 18 கம்போடிய இராணுவ வீரர்களை விடுவிக்கும் நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் அறிவித்தார்.

மேலும், தாய்லாந்து-கம்போடியா நாடுகளைப் பேச்சு வார்த்தைக்குக் கொண்டு வந்ததில் அன்வார் இப்ராஹிம் ஒரு முக்கியப் பங்கை வகித்ததாக அதிபர் டிரம்ப் பாராட்டினார். அமைதி, நிலைத்தன்மைக்கான மலேசியாவின் உறுதியான அர்ப்பணிப்பு காரணமாகவே இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க அரச தந்திர வெற்றியைப் பெற முடிந்தது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது