கோலாலம்பூர், அக்டோபர்.25-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, நாளை அக்டோபர் 26-ஆம் தேதி துவங்கும், 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவிற்கு வருகை புரிகின்றார்.
கடந்த ஜனவரி மாதம், டிரம்ப் பதவியேற்ற பின்னர், தென்கிழக்காசியாவில் அவர் கலந்து கொள்ளும் முதல் மாநாடு இதுவாகும் என்று விஸ்மா புத்ரா இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாளை அக்டோபர் 26-ஆம் தேதி, அன்வார் மற்றும் டிரம்ப் இடையே இரு தரப்பு சந்திப்புப் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதிப்பதோடு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துப் பகிர்வு நடத்த உள்ளனர்.
டிரம்ப்பின் வருகை, மலேசியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தி, வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும் ன்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.








