Oct 25, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா
அரசியல்

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

47வது ஆசியான் உச்சி மாநாட்டில், மியன்மார் மீதான ஐந்து அம்ச ஒருமித்த ஒப்பந்தம் செயல்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாடு, முழுமையான மற்றும் ஆலோசனை அமர்வு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முழுமையான அமர்வின் போது, ஆசியான் சமூகக் கட்டமைப்பு மற்றும் ஆசியானின் வெளி உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஆலோசனை அமர்வின் போது, ஆசியான் தலைவர்கள், மியான்மாரில் நடக்கும் அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வழிகள் குறித்து விவாதிப்பார்கள் என்றும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News