கடந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் வைப்புத்தொகையை இழக்கும் அளவிற்கு தாம் தோல்வி அடைந்தற்கு முக்கிய காரணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
இது தொடர்பாக லங்காவில் உள்ள வாக்காளரும், தமது நண்பருமான ஒருவரிடம் தாம் நேரடியாக கேட்ட போது, தேர்தலில் லஞ்ச அமலாக்கம் மேலோங்கியிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வாக்காளரிடம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று தாம் கேட்ட போது 100 வெள்ளி வழங்கப்பட்டதாக அந்த வாக்காளர் ஒப்புக்கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
