Jul 15, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பானின் 10 அம்ச வாக்குறுதிகள் ஜோகூர் மக்களின் விடியலுக்கு அஸ்திவாரம்: சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு நம்பிக்கை!
அரசியல்

பக்காத்தான் ஹராப்பானின் 10 அம்ச வாக்குறுதிகள் ஜோகூர் மக்களின் விடியலுக்கு அஸ்திவாரம்: சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு நம்பிக்கை!

Share:

நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மையான தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த முறை ஜோகூர் மாநில மக்களுக்காகப் பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்டுள்ள 10 அம்சத் தேர்தல் கொள்கை அறிக்கையானது, மக்களின் நல்வாழ்வு, புதிய வேலை வாய்ப்புகள், வளமான வாழ்வாதாரம் மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்யப் போதுமானதாகும் என்று சுட்டிக்காட்டிய பாபாராய்டு, இத்திட்டங்கள் அனைத்தும் ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மக்களின் விடியலுக்கும் வலுவான அஸ்திவாரமாக அமையும் என்றார்.

குறிப்பாக, ஜோகூர் மக்களின் சுகாதாரக் காப்புறுதித் திட்டம், முதல் வீடு வாங்குபவர்களுக்கான 8 ஆயிரம் ரிங்கிட் முன்பண உதவி, பொதுப் போக்குவரத்திற்கு வெறும் 50 ரிங்கிட்டிலான மாதாந்திரப் பயண அட்டை, வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஜோகூருக்குத் திரும்பும் திட்டம் மற்றும் இளையோர்களுக்கான 500 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி உள்ளிட்ட கவர்ச்சிகரமான சலுகைகள் அம்மாநில மக்களுக்குப் பெரும் பயனளிக்கவல்லவையாகும் என்று பாபாராய்டு சுட்டிக்காட்டினார்.

எனவே இத்தேர்தலில் ஜோகூர் மக்கள் பக்காத்தான் ஹராப்பானைப் பெருவாரியான தொகுதிகளில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தாம் ஆழமாக நம்புவதாகவும் பாபாராய்டு தெரிவித்தார்.

Related News

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

அபாயகரமான லிங்கி தொகுதிக்கு மாறுகிறார் அமினுடின் ஹாரூன்: பி.எச் கோட்டையைத் தக்கவைக்க அதிரடி அரசியல் நகர்வு

அபாயகரமான லிங்கி தொகுதிக்கு மாறுகிறார் அமினுடின் ஹாரூன்: பி.எச் கோட்டையைத் தக்கவைக்க அதிரடி அரசியல் நகர்வு

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: 36 தொகுதிகளில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் / 5 இந்தியர்களுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: 36 தொகுதிகளில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் / 5 இந்தியர்களுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை