Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜொகூர் அரசாங்கத்தில் பாஸ் கட்சிக்கு இடமில்லை என ஓன் ஹாஃபிஸ் உறுதி
அரசியல்

பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜொகூர் அரசாங்கத்தில் பாஸ் கட்சிக்கு இடமில்லை என ஓன் ஹாஃபிஸ் உறுதி

Share:

பாரிசான் நேஷனல் மீண்டும் ஜொகூர் மாநிலத்தில் ஆட்சி அமைத்து, தாம் மீண்டும் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றால், எத்தகையச் சூழ்நிலையிலும் பாஸ் கட்சி ஜொகூர் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்காது என்று ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி உத்தரவாதம் அளித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் சீன சமூகத்தினரை திசைதிருப்புவதற்காகவே பாஸ் கட்சி அரசாங்கத்தில் இணையும் என்ற அரசியல் வதந்திகள் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பாஸ் கட்சி 11 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதற்குப் பதிலாக அவர்களுக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி ஒதுக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் முற்றாக மறுத்துள்ளார்.

மாநிலத்தில் 11 இடங்களில் பாரிசான் நேஷனல் கட்சி பாஸ் கட்சியுடன் நேரடியாக மோதுவதே பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் தங்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் இல்லை என்பதற்கான சான்றாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்குத் தாமே நேரடியாகச் சென்று பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை விளக்கினார்.

Related News

பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜொகூர் அரசாங்கத்... | Thisaigal News