Aug 28, 2026
Thisaigal NewsYouTube
சீன வாக்காளர்கள் திரளாக வாக்களிக்க வேண்டும்
அரசியல்

சீன வாக்காளர்கள் திரளாக வாக்களிக்க வேண்டும்

Share:

ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் சீன வாக்காளர்கள் திரளாக வாக்களிக்க வேண்டும் என மலேசிய சீன சங்கங்களின் கூட்டமைப்பான ஹுவாஸோங் அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய இனக்குழுவான சீன சமூகத்திற்கு தேர்தலில் பெரும் செல்வாக்கு உள்ளது என்பதை உணர்ந்து கடமையாற்ற வேண்டும் என ஹுவாசோங் தலைவர் லிம் கா சுவான் தெரிவித்துள்ளார்.

அரசியல் சோர்வு இருந்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு வாக்குப்பதிவை எளிதாக்க தூதரகங்கள் மூலம் தபால் வாக்குகளைப் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News