பினாங்கு, ஜூன் 21-
பினாங்கு, நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை பக்காப் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.
இத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது அணியாக போட்டியிடுவதற்கு PRM கட்சி சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட வேட்பாளர் திவால் ஆனவர் என்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த இடைத் தேர்தலில் PRM எனும் பார்ட்டி ரக்யாட் மலேசியா கட்சி, போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அஹ்மத் ஜுஃப்லிஸ் ஃபைசா இன்று அறிவித்துள்ளார்.








