கோலாலம்பூர், செப்டம்பர் 06-
நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் தேச நிந்தனைச் சட்டத்தை டிஏபி முழுமையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் நிலைப்பாட்டை அதன் இரண்டு முன்னணி தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் அந்த இரண்டு தலைவர்களின் கூற்றுப்படி அந்த சட்டத்தை அரசாங்கம் மறுபரீசீலனை செய்து வருவதாகவும் அந்த சட்டம், மன்னரை தொடர்புபடுத்தக்கூடிய விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வரையறையை கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஏபி முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கர்ப்பால் சிங், நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட காலத்திலிருந்து அந்த சட்டத்தை எதிர்த்து வந்த DAP, தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளதா? என்று கேட்டு போது, நிந்தனைச் சட்ட விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவான ஒன்றாகும் என்று டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.








