Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி
அரசியல்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

Share:

ஜொகூர் மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் வகையிலோ அல்லது நீர், மின்சார விநியோகத்திற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலோ அமையும் எந்தவொரு தரவு மையத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹபீஸ் காஸி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க 15.3 மில்லியன் ரிங்கிட் செலவில் 38 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தும் உயர்தர தரவு மையங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் விளக்கமளித்துள்ளார். தவறான தகவல்களை நம்பி முதலீட்டாளர்கள் பின்வாங்க வேண்டாம் என்றும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பணயம் வைத்து எந்தவொரு பெரிய முதலீட்டையும் மாநில அரசு ஈர்க்காது என்றும் அவர் உறுதிப்படக் கூறியுள்ளார்.

Related News