May 3, 2026
Thisaigal NewsYouTube
முடா கட்சியின் புதிய தலைவராக அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் தேர்வு
அரசியல்

முடா கட்சியின் புதிய தலைவராக அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் தேர்வு

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

முடா கட்சியின் 2026 - 2029 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு, 25 மத்திய செயலவை உறுப்பினர்களின் ஆதரவோடு அமீரா தேர்வு செய்யப்பட்டார்.

புத்ரி வங்சா சட்டமன்ற உறுப்பினரான அமீரா, கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அக்கட்சியின் தோற்றுநரும், முன்னாள் தலைவருமான சையிட் சாடிக் சையிட் ரஹ்மான் பதவி விலகியதைத் தொடர்ந்து, இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

கட்சியின், 25 மத்திய செயற்குழு பதவிகளுக்கு, 31 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 125 பிரதிநிதிகள் வாக்களித்ததன் அடிப்படையில், புதிய மத்திய செயற்குழுவானது அமைக்கப்பட்டது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான முடா கட்சியின் தலைமைத்துவம் மற்றும் வியூக திட்டமிடல்களுக்கு அமீராவின் புதிய தலைமைத்துவம் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, தலைவர் பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமீரா, மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு