Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு பைசல், ஹம்சா இடையே கடும் போட்டி
அரசியல்

பெர்சத்து கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு பைசல், ஹம்சா இடையே கடும் போட்டி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 28-

பெர்சத்து கட்சியின் தலைவர் பொறுப்பில், டான் ஸ்ரீ முயிடின் யாசின் நீடிக்கவுள்ளதை அடுத்து, அனைத்து தரப்பினர்களின் கவனமும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பவர்களின் பக்கம் திரும்பியுள்ளது.

இவ்வாண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் அக்கட்சி தேர்தலில், 2020ஆம் ஆண்டு முதல் துணைத்தலைவர் பதவியை வகித்துவரும் டத்தூஸ்ரீ அஹ்மத் பைசல் அசுமு, அப்பொறுப்பை தற்காக்கவுள்ளார்.

அவருக்கு போட்டியாக நடப்பு பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் களம் காணவுள்ளதாக, பெர்சத்து கட்சியை சேர்ந்த நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

உச்சமன்ற உறுப்பினராக இரு தவணைகளை நிறைவு செய்திடாத ஹம்சா, முதன்மை பதவிகளுக்கு போட்டியிட முடியாது என இதற்கு முன்பு கூறப்பட்ட நிலையில், தற்போது, அக்கட்சியின் உச்சமன்றம் அவருக்கு போட்டியிட அனுமதியளித்துள்ளதாக அத்தரப்பு கூறியது.

முயிடின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் போது, இடைக்கால தலைவராக துணைத்தலைவரே பொறுப்பேற்பார் என்பதால், துணைத்தலைவர் பதவிக்கு பலத்த போட்டி நிலவுகின்றது.

இவ்வேளையில், பொதுச்செயலாளர் பதவிக்கு சிலாங்கூர் பெர்சத்து தலைவர் டத்தூஸ்ரீ அஸ்மின் அலி நியமிக்கப்படுவார் என்றும் அத்தரப்பு தகவல் வெளியிட்டது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்