கோத்தா கினபாலு, நவம்பர்.17-
சபா சட்டமன்றத் தேர்தலில் சிலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அப்துல் ஹாலிம் சிடேக் விலகினார்.
எந்தவொரு நெருக்குதல் மற்றும் அழுத்தமின்றி, அப்துல் ஹாலிம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சபா பிகேஆர் தலைவர் முஸ்தஃபா சக்மூட் தெரிவித்தார்.
அப்துல் ஹாகிமி முடிவை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு தொகுதியில் விலகியது மூலம் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் சபா தேர்தலில் பிகேஆர் 21 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.
சபாவில் உள்ள உறுப்புக் கட்சிகளின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஸ்தஃபா சக்மூட் இவ்வாறு தெரிவித்தார்.








