Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

Share:

சிரம்பான், ஜூலை.16-

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தனது 25 வேட்பாளர்களின் பட்டியலை பாரிசான் நேஷனல் நேற்று வெளியிட்டுள்ளது.

பாரிசான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hasan வெளியிட்ட அப்பட்டியலின் படி, அம்னோ 16 தொகுதிகளிலும், மசீச 7 தொகுதிகளிலும், மஇகா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மஇகா சார்பில் A. Achutan, Sri Tanjung தொகுதியிலும், R. Thinalan, Seremban Jaya தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய தலைவர்களில், டத்தோ ஸ்ரீ முகமது ஹசான் மீண்டும் Rantau தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநில அம்னோ தலைவர் டத்தோ Datuk Seri Jalaluddin Alias , Pertang தொகுதியிலும், Datuk Mohd Razi Mohd Ali, Sungai Lui தொகுதியிலும், Datuk Mustapha Nagoor, Palong தொகுதியிலும், Datuk Mohd Zaidy Abdul Kadir, Jeram Padang தொகுதியிலும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Datuk Ismail Lasim, இம்முறை Senaling தொகுதியில் இருந்து Juasseh தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட "நீல அலை" நெகிரி செம்பிலானிலும் தொடர வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாரிசான் நேஷனல் வெற்றி பெறுவது அவசியம் என்றும் டத்தோ ஸ்ரீ முகமது ஹசான் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில், பாரிசான் நேஷனல் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்